TNPSC Thervupettagam

நுண்நெகிழி அகற்றி கண்டுபிடிப்பு – Plas Stick

June 7 , 2026 7 days 90 0
  • விவான் சாவ்சாரியா, அரியானா அகர்வால் மற்றும் அவ்யானா மேத்தா ஆகிய 16 வயதுடைய மூன்று இந்தியப் பதின்ம வயதினர், Plas-Stick என்ற மட்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு கண்டுபிடிப்பை உருவாக்கியதற்காக உலகளாவிய எர்த் பிரைஸ் - உலகளாவிய வெற்றியாளர்கள் விருதை வென்றுள்ளனர்.
  • Plas-Stick என்பது தண்ணீரிலிருந்து நுண்நெகிழிகளை அகற்றுவதற்காக புளியம்பழ விதைக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தூள் ஆகும்.
  • இது நுண்நெகிழித் துகள்களை ஈர்த்து, அவற்றை ஒன்றாகக் கட்டியாக்குகிறது; பின்னர் இந்த கட்டிகளை ஒரு சிறிய கையிலடங்கக் கூடிய காந்தத்தைப் பயன்படுத்தி அகற்றி விடலாம்.
  • இம்முறை மின்சாரம் தேவையில்லாதது, குறைந்த செலவிலானது மற்றும் கிராமப்புற மற்றும் குறைந்த வளங்களைக் கொண்ட பகுதிகளுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
  • இந்தத் திட்டம் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) கவுஹாத்தியின் ஆதரவுடன் உருவாக்கப் பட்டதுடன், இதற்காக 12,500 அமெரிக்க டாலர் நிதியுதவியும் கிடைத்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்