தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது அனைத்து உள்வரும் அழைப்புகளுக்கும் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) பதிவு செய்யப்பட்ட பெயரைக் காட்டுமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்கீட்டு நிறுவனங்களைக் கோர உள்ளது.
அழைப்பாளர் பெயர் வெளியீடு (CNAP) எனப்படும் இந்த அம்சமானது ஹரியானாவில் பரிசோதிக்கப்படுகிறது.
CNAP, "சந்தேகிக்கப்பட்ட" அல்லது "சந்தேகத்திற்குரியது" என்று அழைப்புகளைக் குறிக்கும் அதே அமைப்பைப் பயன்படுத்துகிறது.
பயனர்கள் அழைப்பாளர்களை அடையாளம் காண உதவுவதன் மூலம் தேவையற்ற மற்றும் மோசடி அழைப்புகளைக் குறைப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
DoT ஆனது அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு CLIR (அழைப்பாளர் தகவல் அடையாளக் கட்டுப்பாடு) மூலம் மட்டுமே அடையாள மறைப்பு அனுமதிக்கப்படுவதுடன், இயல்பாகவே CNAP அம்சத்தினை இயக்கும்.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது இதன் அமலாக்கத்திற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.