TNPSC Thervupettagam

KYC-அடிப்படையிலான அழைப்பாளர் அடையாளம்

December 9 , 2025 3 days 27 0
  • தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது அனைத்து உள்வரும் அழைப்புகளுக்கும் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) பதிவு செய்யப்பட்ட பெயரைக் காட்டுமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்கீட்டு நிறுவனங்களைக் கோர உள்ளது.
  • அழைப்பாளர் பெயர் வெளியீடு (CNAP) எனப்படும் இந்த அம்சமானது ஹரியானாவில் பரிசோதிக்கப்படுகிறது.
  • CNAP, "சந்தேகிக்கப்பட்ட" அல்லது "சந்தேகத்திற்குரியது" என்று அழைப்புகளைக் குறிக்கும் அதே அமைப்பைப் பயன்படுத்துகிறது.
  • பயனர்கள் அழைப்பாளர்களை அடையாளம் காண உதவுவதன் மூலம் தேவையற்ற மற்றும் மோசடி அழைப்புகளைக் குறைப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • DoT ஆனது அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு CLIR (அழைப்பாளர் தகவல் அடையாளக் கட்டுப்பாடு) மூலம் மட்டுமே அடையாள மறைப்பு அனுமதிக்கப்படுவதுடன், இயல்பாகவே CNAP அம்சத்தினை இயக்கும்.
  • இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது இதன் அமலாக்கத்திற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்