TNPSC Thervupettagam
May 17 , 2026 15 days 86 0
  • 2025 ஆம் ஆண்டிற்கான LEADS (பல்வேறு மாநிலங்களில் தளவாடச் செயல்பாடு எளிமை) அறிக்கையானது தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மிசோரம் மற்றும் டெல்லியை தளவாடச் செயல்திறனில் "சிறந்த முன்மாதிரிகள்" என்று தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • இந்த அறிக்கை DPIIT (தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை) மூலம் வெளியிடப்பட்டது.
  • LEADS அமைப்பானது தளவாடக் கொள்கை, உள்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மதிப்பிடுகிறது.
  • LEADS 2025 ஆனது சிறந்த முன்மாதிரிகள், சிறந்த செயல்திறன் கொண்டவர்கள், முடுக்கிகள் / வேகப்படுத்துபவர்கள் மற்றும் வளர்ச்சியைத் தேடுபவர்கள் என்ற ஒரு புதிய நான்கு அடுக்கு முறையை அறிமுகப்படுத்தியது.
  • குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பிற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் இணைந்து "சிறந்த செயல்திறன் கொண்டவர்கள்" பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • சிறந்த மதிப்பீட்டுத் துல்லியத்திற்காக LEADS 2025-ஆம் ஆண்டில் சுமார் 59% முக்கியத்துவம் வாய்ந்த புறநிலை மற்றும் ஆதார அடிப்படையிலான குறி காட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்