சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (LiFE) என்ற பிரச்சாரம் ஆனது, 2021 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 மாநாட்டில் பிரதமர் அவர்களால் தொடங்கப் பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் (UNSG) அன்டோனியோ குட்டரெஸ், இந்தப் பிரச்சாரத்திற்கான கையேடு, சின்னம் மற்றும் முழக்கம் ஆகியவற்றின் வெளியீட்டு விழாவில் இந்தியப் பிரதமருடன் இணைந்து பங்கேற்றார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தனது இரண்டாவது பதவிக் காலத்தை தொடங்கிய பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.