சுயஉதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளின் (CBOs) முழுமையான டிஜிட்டல் மயமாக்கலுக்கான டிஜிட்டல் தளமான LokOS-ஐ (மக்கள் இயங்குதளம்) மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிப்படைத்தன்மை, நிதி உள்ளடக்கம் மற்றும் ஊரக ஆளுகையை மேம்படுத்தும் நோக்கில் DAY-NRLM (தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்) திட்டத்தின் கீழ் LokOS செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் தளம் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பதிவுகள், சேமிப்புகள், கடன்கள், திருப்பிச் செலுத்துதல்கள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் வாழ்வாதார விவரங்களை டிஜிட்டல் மயமாக்குகிறது.
இது ஆதார் மற்றும் வங்கியுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாளங்கள், நிகழ் நேரப் பகுப்பாய்வு மற்றும் கிராமம் முதல் தேசிய அளவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டகங்ளை வழங்குகிறது.
பயனாளிகளைக் கண்டறிதல் மற்றும் சென்றடைதலை சாத்தியமாக்குவதன் மூலம் 'லட்சாதிபதி தீதி' முன்னெடுப்பிற்கு LokOS ஆதரவளிக்கிறது.
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் LokOS-இன் கீழ் தொடங்கப்பட்ட 'SHE-LEAPS' என்பது, சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஊரகப் பெண்களின் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ஒரு டிஜிட்டல் தளமாகும்.