TNPSC Thervupettagam

LokOS - மக்கள் இயங்குதளம்

July 8 , 2026 7 hrs 0 min 9 0
  • சுயஉதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளின் (CBOs) முழுமையான டிஜிட்டல் மயமாக்கலுக்கான டிஜிட்டல் தளமான LokOS-ஐ (மக்கள் இயங்குதளம்) மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வெளிப்படைத்தன்மை, நிதி உள்ளடக்கம் மற்றும் ஊரக ஆளுகையை மேம்படுத்தும் நோக்கில் DAY-NRLM (தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்) திட்டத்தின் கீழ் LokOS செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தத் தளம் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பதிவுகள், சேமிப்புகள், கடன்கள், திருப்பிச் செலுத்துதல்கள், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் வாழ்வாதார விவரங்களை டிஜிட்டல் மயமாக்குகிறது.
  • இது ஆதார் மற்றும் வங்கியுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாளங்கள், நிகழ் நேரப் பகுப்பாய்வு மற்றும் கிராமம் முதல் தேசிய அளவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டகங்ளை வழங்குகிறது.
  • பயனாளிகளைக் கண்டறிதல் மற்றும் சென்றடைதலை சாத்தியமாக்குவதன் மூலம் 'லட்சாதிபதி தீதி' முன்னெடுப்பிற்கு LokOS ஆதரவளிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் LokOS-இன் கீழ் தொடங்கப்பட்ட 'SHE-LEAPS' என்பது, சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஊரகப் பெண்களின் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ஒரு டிஜிட்டல் தளமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்