இந்தியாவின் திட்டமாதிரியில் அமைந்த முதல் மின் ஆளுகைத் திட்டமான MCA21பதிப்பு 3.0 என்பதின் முதல் கட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சரான அனுராக் தாகூர் அவர்களால் இத்திட்டமானது தொடங்கி வைக்கப் பட்டது.
MCA21 என்பதின் இந்தப் பதிப்பானது தரவுப் பகுப்பாய்வு சார்ந்ததாகும்.
MCA21 என்பது பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் இணையதளமாகும்.
2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் தளமானது நிறுவனங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் பங்குதார்களும் பொது மக்களும் எளிதில் அணுகும் வகையில் வழிவகை செய்துள்ளது.
MCA21 பதிப்பு 3.0 ஆனது பெருநிறுவனங்களின் இணக்கத்தினையும் பங்குதாரர்களின் அனுபவங்களையும் சீரமைப்பதற்காக வேண்டி சில புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.