TNPSC Thervupettagam

இந்தோ-இஸ்ரேலிய வேளாண் செயல்திட்டம்

May 27 , 2021 1520 days 634 0
  • இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து 2023 ஆம் ஆண்டு வரை தொடர உள்ள மூன்றாண்டு கூட்டுச் செயல் திட்டம்  ஒன்றைத் தொடங்கியுள்ளன.
  • இந்தக் கூட்டுச் செயல் திட்டமானது வேளாண்மையில் ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தப் புதிய செயல்திட்டத்தின் கீழ்,
    • இஸ்ரேலிய நாட்டின் வேளாண் மற்றும் நீர்ப்பாசன தொழில் நுட்பங்கள் பற்றி இந்திய விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 13 சிறப்பு நிறுவனங்கள் நிறுவப்படும்.
    • 8 மாநிலங்களில் 75 கிராமங்களுக்குள் “சிறப்புக் கிராமங்கள்எனும் வேளாண் முன்மாதிரி சூழலமைப்புகள் உருவாக்கப்படும்.
  • இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வேளாண் துறை சார்ந்த இரு தரப்பிலான உறவுகள் 1993 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • இந்தப் புதிய திட்டமானது 5வது இந்திய-இஸ்ரேலிய வேளாண் செயல்திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்