TNPSC Thervupettagam

உயிரிப் பொருட்கள் பயன்பாடு மீதான தேசியத் திட்டம்

May 27 , 2021 1519 days 608 0
  • நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களில் உயிரிப் பொருட்களை பயன்படுத்துவது மீதான ஒரு தேசியத் திட்டத்தினை அமைக்க  உள்ளதாக மத்திய ஆற்றல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • விவசாயத் தாளடி எரிப்பினால் ஏற்பட்ட காற்று மாசுபாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது வழிகாட்டுக் குழுவினால் (Steering Committee) நிர்வகிக்கப்படும்.
  • வழிகாட்டுக் குழுவானது ஆற்றல்துறை செயலாளரைத் தலைமையாகக் கொண்ட பெட்ரோலியம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள், பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு குழு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்