தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து இந்திய நாடானது தன்னை “சமூகப் பரவல்” நிலையில் (Community Transition – CT) உள்ளதாக குறிப்பிடவே இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
அதற்குப் பதிலாக “நோய்த் தொற்றுத் திரள்” எனப்படும் குறைவான மிததீவிரமான வகைப்பாட்டினையே இந்தியா பயன்படுத்துகிறது.
அமெரிக்கா, பிரேசில், ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்சு உள்ளிட்ட நாடுகள் தம்மை சமூகப் பரவல் நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளன.
அதிக எண்ணிக்கையிலான உறுதி செய்யப்பட்ட தொற்றுகளை கொண்ட 10 நாடுகளில் இத்தாலியும் ரஷ்யாவும் மட்டுமே தம்மை சமூகப் பரவல் நிலையில் உள்ள நாடுகளாக அறிவிக்க வில்லை.
சமூகப் பரவல் என்பது கடந்த 14 நாட்களில் ஏற்பட்ட புதிய நோய்த் தொற்றுக்கானது சர்வதேசப் பயணம் மேற்கொண்டவரிடையே பதிவாகாத, ஒரு குறிப்பிட்ட திரளுடன் இணைக்கப்பட இயலாத ஒரு பெருந்தொற்று நிலை ஆகும்.