மத்திய அரசானது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான ஊதியத்தை சுமார் 2% முதல் 7% வரை உயர்த்தியுள்ளது.
இதன் குறிப்பிட்ட மதிப்பில் NREGS ஊதியங்கள் ஆனது 7 ரூபாய் முதல் 26 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.
இதில் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் NREGS ஊதியங்கள் 7 ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளன.
ஹரியானாவில் அதிகபட்சமாக 26 ரூபாய் உயர்வு பதிவாகியுள்ளது.
எந்தவொரு மாநிலத்திலும் NREGS ஊதியங்கள் ஒரு நாளைக்கு 400 ரூபாயை எட்டியது இதுவே முதல் முறையாகும்.
நடப்பு நிதியாண்டில் (2024-25), கோவா மாநிலத்தில் அதன் முந்தைய ஆண்டு (2022-23) ஊதிய விகிதத்தை விட அதிகபட்சமாக 10.56% உயர்வு பதிவாகியுள்ளது என்பதோடு உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றில் மிகக் குறைந்த அளவாக 3.04% உயர்வு பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்திற்கான ஒரு நாள் ஊதியம் என்பது 319 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக 5.33% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.