கேரளாவைச் சேர்ந்த 32 வயதான துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளரான விஷ்ணு நந்தன் என்பவர் MOSAiC ஆர்க்டிக் ஆய்வில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து வரும் 300 விஞ்ஞானிகளில் ஒரே இந்தியராக உருவெடுக்க விருக்கின்றார்.
MOSAiC (ஆர்க்டிக் காலநிலை ஆய்விற்கான பல்துறை நகர்வு ஆய்வகம் - Multidisciplinary Drifting Observatory for the Study of Arctic Climate) என்பது வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு மிகப்பெரிய ஆர்க்டிக் கடல் ஆய்வு ஆகும்.
ஒரு வருடம் முழுவதும் வட துருவத்தில் ஒரு மிகப்பெரிய அளவிலான ஆய்வை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
MOSAiC ஆனது ஆர்க்டிக் பகுதியின் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வது மற்றும் அந்தக் காலநிலை மாற்றம் உலகின் பிற பகுதிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்வது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த கப்பலான “போலார்ஸ்டெர்ன்” இந்த ஆய்வில் பங்கேற்க இருக்கின்றது.