பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை (MPLADS - Members of Parliament Local Area Development Scheme) மத்திய அமைச்சரவை மீண்டும் திரும்பக் கொண்டு வந்துள்ளது.
இருப்பினும், இதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட ₹5 கோடிக்குப் பதிலாக ₹2 கோடி மட்டுமே கிடைக்கும்.
இந்தியாவின் தொகுப்பு நிதியில், இத்திட்டத்திற்கான நிதியைச் சேர்த்து 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது.
இத்திட்டத்திலிருந்து சேமிக்கப்படும் நிதி, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தச் செய்யவும், PM Garib Kalyan Yojana என்பதின் கீழ் இலவச ரேஷன் வழங்கச் செய்யவும், மக்களுக்கு இலவசத் தடுப்பூசி போடவும் வேண்டி நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இது இந்திய அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் ஒரு திட்டமாகும்.