TNPSC Thervupettagam

MyNRAI Athlete செயலி

May 7 , 2026 3 days 79 0
  • இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் (NRAI) தனது 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது MyNRAI Athlete செயலியை அறிமுகப் படுத்தியது.
  • MyNRAI என்பது விளையாட்டு வீரர்களின் பதிவு, செயல்பாட்டைக் கண்காணித்தல், சான்றிதழ் வழங்குதல் மற்றும் தரவுத் தள மேலாண்மை ஆகியவற்றுக்கான ஒரே டிஜிட்டல் தளமாகும்.
  • இது NRAI-யை இந்தியாவின் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் விளையாட்டுக் கூட்டமைப்பாக மாற்றுகிறது.
  • 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக "10-shot experience" என்ற திட்டத்தின் மூலம் 7.5 லட்சம் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடுதல் விளையாட்டை அறிமுகப் படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
  • துப்பாக்கி சுடுதல் விளையாட்டை மேம்படுத்துவதற்காக வேண்டி, உரிமையாளர் அடிப்படையிலான துப்பாக்கி சுடுதல் போட்டியான இந்திய துப்பாக்கி சுடுதல் லீக் (SLI) ஒன்றையும் NRAI அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்