சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், NB Driver (அண்மைய இயக்கி – Neighbourhood Driver) எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு கணித மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
இது செல்களில் புற்றுநோயை உருவாக்கும் சில மாற்றங்களைக் கண்டறிய வேண்டிப் பயன்படுத்தப் படுகிறது.
புற்றுநோயின் வளர்ச்சிக்கு காரணமான அந்த மரபணு மாற்றங்களைத் துல்லியமாக அறிய டிஎன்ஏ அமைப்பினை ஆராயும் தொழில்நுட்பத்தை (இதுவரை பயன்படுத்தப் படாத) இந்த வழிமுறை பயன்படுத்துகிறது.