TNPSC Thervupettagam

இந்தியா – நேபாளம் நட்புறவு இரயில் பாதைத் திட்டம்

July 21 , 2021 1476 days 611 0
  • 2021 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று இந்தியாவின் ஜெய்நகருக்கும் நேபாளத்தின் குர்தா பகுதிக்கும் இடையேயான இரயில் பாதையின் சோதனை ஓட்டமானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த இரயில் பாதையின் மொத்த நீளம் 34.50 கிமீ ஆகும்.
  • இது இரு நாடுகளுக்கிடையேயான முதல் இரயில் பாதை இணைப்பாகும்
  • இது நேபாளத்தின் மஹோத்தாரி மாவட்டத்திலுள்ள குர்தா என்ற பகுதியினை பீகாரின் மதுபானி மாவட்டத்திலுள்ள ஜெய்நகருடன் இணைக்கின்றது.
  • இந்தியா-நேபாளம் நட்புறவு இரயில்பாதைத் திட்டத்தின் கீழ் ஜெய்நகர்-குர்தா இரயில்பாதையை IRCON நிறுவனம் அமைக்கிறது.
  • இதற்கு இந்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.
  • 17 கி.மீ. நீளம் கொண்ட இரண்டாவது ரயில்பாதை  இணைப்பானது குர்தா பகுதியை பங்கஹா என்ற பகுதியுடன் இணைக்க உள்ளது.
  • 17 கி.மீ. நீளமான மூன்றாவது ரயில்பாதை இணைப்பானது பங்கஹா பகுதியினைப்  பர்திபாஸ் என்ற பகுதியுடன் இணைக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்