தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின் (NCBS) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பங்கு தாரர் நிறுவனங்கள் இணைந்து, மரங்களின் இருப்பு ஆய்வுகளின் இந்தியாவின் மிகப்பெரிய மெட்டா-தரவுத் தொகுப்பான INvenTree-meta வைத் தொகுத்துள்ளனர்.
'INvenTree-meta' என்பது இந்தியாவின் மிகப்பெரிய மர இருப்பு மெட்டா-தரவுத் தொகுப்பாகும் என்பதோடு இது 4,650 ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் முழுவதும் 465 வெளியிடப் பட்ட ஆய்வுகளை (1991-2023) உள்ளடக்கியது.
இது அனைத்து முக்கிய இந்திய உயிரியத் தொகுதிகளையும் (biomes) உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பிற்குள், துண்டு துண்டாக இருந்த மர இருப்பு தரவுத் தொகுப்புகளை ஒருங்கிணைக்கிறது.
மரங்களின் இருப்புத் தரவுத்தொகுப்புகளில் 80%-க்கும் அதிகமானவை இன்னும் பொது வெளியில் இல்லை என்பதையும், வட மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு இந்தியா, மேற்கு இமயமலை மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற பல்லுயிர் பெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகள் குறைவாகவே மாதிரியாக்கம் செய்யப் பட்டு உள்ளன என்பதையும் இந்த தரவுத்தொகுப்பு எடுத்துக்காட்டுகிறது.
இது விரைவான வன இழப்பை எதிர்கொள்ளும் பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள தரவு இடைவெளிகளையும் கண்டறிகிறது.
இந்த தரவுத்தொகுப்பு கார்பன் சேமிப்பு மதிப்பீடு, பல்லுயிர் கண்காணிப்பு, பருவ நிலை மாற்ற ஆய்வுகள் மற்றும் நிலையான வன மேலாண்மை ஆகியவற்றுக்கு துணை புரிகிறது.