உலகின் முதல் வெற்றிகரமான அறிவியல் பூர்வமான புலிகள் மீளறிமுக முன்னெடுப்பு
July 26 , 2026 2 days 67 0
ஒரு குறிப்பிட்ட பகுதியில் முற்றிலுமாக அழிந்துபோன புலிகளை, அறிவியல் பூர்வமாக மீண்டும் அறிமுகப்படுத்தும் உலகின் முதல் வெற்றிகரமான முயற்சி இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
2005-ஆம் ஆண்டிற்குள் வேட்டைக்காரர்களால் அங்குள்ள புலிகள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில், இக்காப்பகம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, அறிவியல் அடிப்படையிலான இடமாற்றத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது.
2005-ஆம் ஆண்டில் புலிகள் முற்றிலுமாக அழிந்துபோயிருந்த நிலையிலிருந்து மீண்டு, இன்று 56 புலிகளுக்கு வாழ்விடமளிக்கும் அளவிற்கு சரிஸ்கா காப்பகம் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
புலிகள் பாதுகாப்பில் நாட்டின் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய அரசு, கடந்த பத்தாண்டுகளில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 46-லிருந்து 58-ஆக அதிகரித்து ள்ளதாகத் தெரிவித்தது.
மேலும், 2022-ஆம் ஆண்டிற்குள் காட்டுப் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்ற 'செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தின்' இலக்கை இந்தியா வெற்றிகரமாக அடைந்துள்ளதாகவும் அரசு குறிப்பிட்டது.
சிறுத்தை பாதுகாப்புத் திட்டம் என்பது கண்டங்களுக்கு இடையே பெரிய ஊனுண்ணி விலங்கு ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தும் உலகின் முதல் முயற்சியாகும்.