TNPSC Thervupettagam

வளாகப் பல்லுயிர் பதிவேடு முன்னெடுப்பு

July 27 , 2026 15 hrs 0 min 29 0
  • கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள பல்லுயிர்களை ஆவணப் படுத்துவதற்காக தேசிய பல்லுயிர் ஆணையத்துடன் (NBA) இணைந்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (NCF), வளாக பல்லுயிர் பதிவேடு (CBR) முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA) என்பது உயிரியல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும், ஆலோசனை வழங்கும் மற்றும் ஊக்குவிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • கிராமம், நகரம் மற்றும் மாநகர அளவிலான பல்லுயிர் மற்றும் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்தும் மக்கள் பல்லுயிர் பதிவேட்டினால் (PBR) ஈர்க்கப்பட்டு வளாக பல்லுயிர் பதிவேடு (CBR) உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கணக்கெடுப்புகள், வளாக நடைகள் மற்றும் வழக்கமான அவதானிப்புகள் மூலம் பல்லுயிர்களை ஆவணப்படுத்துவார்கள்.
  • இந்த முன்னெடுப்பானது பல்லுயிர்த் தரவுகளைப் பதிவு செய்ய iNaturalist, eBird மற்றும் Season Watch போன்ற குடிமக்கள் அறிவியல் தளங்களைப் பயன்படுத்துகிறது.
  • வளாக பல்லுயிர் பதிவேடானது (CBR) பல்லுயிர் பாதுகாப்பை வலுப்படுத்துவது, சுற்றுச் சூழல் அமைப்பு மேலாண்மையை மேம்படுத்துவது மற்றும் மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்