துத்வா புலிகள் காப்பகத்தில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை
July 27 , 2026 15 hrs 0 min 37 0
உத்தரப் பிரதேசத்தில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தில் (DTR) இந்தியக் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கான நான்காவது காண்டாமிருகக் கணக்கெடுப்பு 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது.
அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைப் போலவே, உத்தரப் பிரதேசமும் 'பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின்' இயற்கையான வாழ்விடத்தைக் கொண்ட இந்தியாவின் மூன்று மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
துத்வா புலிகள் காப்பகம் உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர்-கேரி மாவட்டத்தில், இந்தியா-நேபாள எல்லையில் அமைந்துள்ளது.
இது தனித்துவமான 'தெராய்' (Terai) புல்வெளி மற்றும் சதுப்பு நிலச் சூழலமைப்பைக் கொண்டுள்ளது.
மரபணுப் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும், நெருங்கிய இனச் சேர்க்கையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், 11 காண்டாமிருகங்கள் அடைப்புக்களிலிருந்து விடுவிக்கப் பட்டு, காட்டில் சுதந்திரமாக உலாவ விடப்பட்டுள்ளன.
இது வங்காளப் புலி, சதுப்பு நில மான் (பராசிங்கா) மற்றும் ஆசிய யானை போன்ற அழிந்து வரும் உயிரினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது.