TNPSC Thervupettagam
October 26 , 2026 14 hrs 0 min 30 0
  • தேசியப் பொருட்கள் மற்றும் பங்குச் சந்தை (NCDEX) நிறுவனமானது NDEX மற்றும் FINNDEX ஆகிய இரண்டு புதிய குறியீடுகளுடன் பங்கு-குறியீட்டுப் பிரிவில் நுழையத் தயாராகி வருகிறது.
  • NDEX 20 பெரிய மற்றும் சுறுசுறுப்பாக வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்களைக் கண்காணிக்கும், அதே நேரத்தில் FINNDEX காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர்த்து 15 நிதித் துறை நிறுவனங்களைக் கண்காணிக்கும்.
  • இரண்டு குறியீடுகளும் பங்குத் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் ஆகியவற்றிற்கு சந்தையில் புழக்கத்தில் உள்ள பங்குகளின் மொத்த மதிப்பு சந்தை மூலதனமாக்கல் (30%), சராசரி தினசரி வர்த்தக மதிப்பு (30%), பீட்டா (20%) மற்றும் ஏற்ற இறக்கம் (20%) ஆகிய நான்கு காரணிகளைப் பயன்படுத்தும்.
  • தேசியப் பங்குச் சந்தையிலிருந்து (NSE) விலைகளைப் பயன்படுத்தி என்.எஸ்.இ இன்டிசஸ் (NSE Indices) இந்த இரண்டு குறியீடுகளையும் கணக்கிட்டுப் பராமரிக்கும்.
  • NCDEX இந்தக் குறியீடுகளை 2027-28 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை) தொடங்கத் திட்டமிட்டுள்ளது, அதைத் தொடர்ந்து பரஸ்பர நிதிகள், பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs), எதிர்கால மற்றும் விருப்ப ஒப்பந்தங்கள் ஆகியவற்றைத் தொடங்கவுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்