TNPSC Thervupettagam

அமுர் பருந்து வலசை போதல் - மணிப்பூர்

October 26 , 2026 14 hrs 0 min 30 0
  • செயற்கைகோள் அலைபரப்பிகள் பொருத்தப்பட்ட (satellite-tagged) இரண்டு அமுர் பருந்துகள் 23 நாடுகள் முழுவதும் சுமார் 20,000 கிமீ சுற்றுப் பயண வலசை போதலுக்குப் பிறகு மணிப்பூருக்குத் திரும்பியுள்ளன.
  • அபபாங் மற்றும் அலங் ஆகியவை வடகிழக்கு இந்தியாவுக்கும் சோமாலியாவுக்கும் இடையே அரபிக் கடலின் மேல் சுமார் 3,000 கிமீ உட்பட, சுமார் 6,000 கிமீ இடைவிடாத வலசைப் பயணத்தை முடித்தன.
  • அமுர் பருந்து (ஃபால்கோ அமூரென்சிஸ்) வடகிழக்குச் சீனா மற்றும் ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது மற்றும் தென்னாப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழிக்கிறது.
  • இது IUCN செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (Least Concern - LC) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகியவை முக்கியமான தங்கும் பகுதிகளாகும், அங்கு இந்தப் பறவைகள் நீண்ட தூரப் பயணங்களுக்கான ஆற்றலை உருவாக்க முக்கியமாகக் கரையான் மற்றும் எறும்புகள் போன்ற பூச்சிகளை உண்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்