தேசியப் பொருட்கள் மற்றும் பங்குச் சந்தை (NCDEX) நிறுவனமானது NDEX மற்றும் FINNDEX ஆகிய இரண்டு புதிய குறியீடுகளுடன் பங்கு-குறியீட்டுப் பிரிவில் நுழையத் தயாராகி வருகிறது.
NDEX 20 பெரிய மற்றும் சுறுசுறுப்பாக வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்களைக் கண்காணிக்கும், அதே நேரத்தில் FINNDEX காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர்த்து 15 நிதித் துறை நிறுவனங்களைக் கண்காணிக்கும்.
இரண்டு குறியீடுகளும் பங்குத் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் ஆகியவற்றிற்கு சந்தையில் புழக்கத்தில் உள்ள பங்குகளின் மொத்த மதிப்பு சந்தை மூலதனமாக்கல் (30%), சராசரி தினசரி வர்த்தக மதிப்பு (30%), பீட்டா (20%) மற்றும் ஏற்ற இறக்கம் (20%) ஆகிய நான்கு காரணிகளைப் பயன்படுத்தும்.
தேசியப் பங்குச் சந்தையிலிருந்து (NSE) விலைகளைப் பயன்படுத்தி என்.எஸ்.இ இன்டிசஸ் (NSE Indices) இந்த இரண்டு குறியீடுகளையும் கணக்கிட்டுப் பராமரிக்கும்.
NCDEX இந்தக் குறியீடுகளை 2027-28 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை) தொடங்கத் திட்டமிட்டுள்ளது, அதைத் தொடர்ந்து பரஸ்பர நிதிகள், பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs), எதிர்கால மற்றும் விருப்ப ஒப்பந்தங்கள் ஆகியவற்றைத் தொடங்கவுள்ளது.