TNPSC Thervupettagam

NeVA முன்னெடுப்பு - மேற்கு வங்கம்

June 11 , 2026 4 days 72 0
  • மேற்கு வங்க சட்டப் பேரவையானது தேசிய இ-விதான் பயன்பாட்டை (NeVA) செயல் படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
  • இந்தியாவில் NeVA முன்னெடுப்பில் இணையும் 33ஆவது சட்டமன்றமாக மேற்கு வங்கம் உருவெடுத்துள்ளது.
  • NeVA என்பது நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் சட்டமன்ற செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் ஒரு குறிக்கோள் சார்ந்த திட்டமாகும்.
  • இந்தத் தளமானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் காகிதமில்லா, வெளிப்படையான மற்றும் திறமையான ஆளுமையை ஆதரிக்கிறது.
  • இது மசோதாக்கள், கேள்விகள், அறிவிப்புகள், குழு அறிக்கைகள், சட்டமன்றப் பதிவுகள் மற்றும் சபையின் நடவடிக்கைகளுக்கான டிஜிட்டல் அணுகலை வழங்கச் செய்கிறது.
  • இதுவரை 21 சட்டமன்றங்கள் NeVA தளத்தின் மூலம் முழுமையான டிஜிட்டல் செயல் பாட்டிற்கு மாறியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்