TNPSC Thervupettagam

பான் பருவநிலை மாநாடு 2026

June 11 , 2026 4 days 110 0
  • ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) துணை அமைப்புகளின் 64ஆவது அமர்வு (SB64) ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறுகிறது.
  • இது அடுத்த நாடுகளின் கூட்டமைப்பு (COP) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தொழில் நுட்ப விவாதங்களை முன்னெடுக்கும் வருடாந்திர இடைக்கால பருவநிலை கூட்டம் ஆகும்.
  • இம்மாநாடு பருவநிலை தழுவல், தணிப்பு, பருவநிலை நிதி, இழப்பு மற்றும் சேதம் மற்றும் நியாயமான மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • தழுவல் நிதியை அதிகரித்தல், COP30 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெலெம் தழுவல் குறிகாட்டிகளை செயல்படுத்துதல் மற்றும் பருவநிலை-மீள்திறன் கொண்ட வேளாண்மையை வலுப்படுத்துதல் ஆகியவை விவாதங்களில் அடங்கும்.
  • இது COP30 இல் ஒப்புக் கொள்ளப் பட்ட நியாயமான மாற்ற வழிமுறையின் செயல் ஆக்கத்தையும் மதிப்பாய்வு செய்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்