TNPSC Thervupettagam

நான்காவது பவளப்பாறை வெளுப்பு நிகழ்வு

June 11 , 2026 4 days 99 0
  • உலகளவில் இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் மிக விரைவான மற்றும் மிகவும் பரவலான நான்காவது உலகளாவிய பவளப்பாறை வெளுத்தல் நிகழ்வு 2025 ஆம் ஆண்டின் மத்தியில் முடிவடைந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
  • இந்நிகழ்வை தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமானது (NOAA) 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று உறுதி செய்தது.
  • இது உலகின் 84% பவளப்பாறை பகுதிகளில் வெளுத்தல் அளவிலான வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தியது.
  • பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் உள்ள 83 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பவளப்பாறைகள் இதனால் பாதிக்கப்பட்டன.
  • 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கு ஆஸ்திரேலிய பவளப்பாறை வெளுத்தல் நிகழ்வுக்குப் பிறகு இந்த நிகழ்வு முடிவடைந்திருக்கலாம்.
  • அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை எதிர்காலத்தில் அடிக்கடி பவளப்பாறை வெளுத்தல் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்