அமெரிக்காவில் மனிதர்களில் முதன்முதலில் நியூ வேர்ல்ட் திருகுப்புழு பாதிப்பு இருப்பது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது.
நியூ வேர்ல்ட் திருகுப்புழுக்கள் என்பது அறிவியல் ரீதியாக கோக்லியோமியா ஹோமினிவோராக்ஸ் என்று அழைக்கப்படுகின்ற நீல-சாம்பல் நிறச் சதை ஈக்கள் ஆகும்.
பெண் திருகுப்புழுக்கள் மனிதர்கள் உள்ளிட்ட சூடான ரத்தம் கொண்ட விலங்குகளின் திறந்த காயங்களில் முட்டையிடுகின்றன.
ஒரு பெண் திருகுப்புழு ஒரு நேரத்தில் 300 முட்டைகள் வரையில் மற்றும் அதன் 10-30 நாட்கள் வரையிலான அதன் ஆயுட்காலத்தில் 3,000 வரை முட்டையிடும்.
உயிருள்ளத் திசுக்களை உண்கின்ற லார்வாக்கள், சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் செப்சிஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து கொண்ட வலிமிகுந்த தொற்றுகளை ஏற்படுத்துகின்றன.
இதற்கான அறிகுறிகளில் ஆறாத காயங்கள், இரத்தப்போக்கு, துர்நாற்றம் மற்றும் தோலில் லார்வாக்கள் அசையும் உணர்வு ஆகியவை அடங்கும்.
மலட்டுப் பூச்சி நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா 1966 ஆம் ஆண்டில் திருகுப்புழு பாதிப்பினை ஒழித்தது.
சமீபத்திய பாதிப்புகள் பனாமா, கோஸ்டாரிகா, நிகரகுவா மற்றும் ஹோண்டுராஸ் பகுதிகளில் ஏற்பட்டுள்ளன.