இது தேசியப் பங்குச் சந்தையால் (NSE) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கருத்துரு சார்ந்த குறியீடாகும்.
இது 'அகிம்சா' (வன்முறையற்ற) கொள்கைகளுக்கு இணங்கச் செயல்படும் Nifty 500-இல் உள்ள நிறுவனங்களைக் கண்காணிக்கிறது.
இது 'பச்சை' நிறப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காத பங்குகளை மட்டுமே உள்ளடக்கியது.
நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள் மற்றும் விலங்குகள் மீதான அவற்றின் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறப் பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன.
ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறப் பிரிவுகள் இக்குறியீட்டில் சேர்க்கப் படுவதில்லை.
இது அரையாண்டுக்கு ஒருமுறை மறுசீரமைக்கப்படும்.
இக்குறியீட்டின் அடிப்படைத் தேதி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆகும் – இதன் அடிப்படை மதிப்பு 1000 ஆகும்.
இதற்குக் 'ஃப்ரீ-ஃப்ளோட்' (free-float) சந்தை மூலதன மதிப்பு பயன்படுத்தப்படுகிறது.
'ஃப்ரீ-ஃப்ளோட்' சந்தை மூலதன மதிப்பு என்பது, நிறுவனத்தின் உரிமையாளர்கள் (promoters) மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க முடியாத பங்குகளைத் (locked-in holdings) தவிர்த்து, பொது வர்த்தகத்திற்குக் கிடைக்கும் பங்குகளின் சந்தை மதிப்பைக் குறிக்கிறது.