ஏற்றுமதி சார்ந்த இணையவழி வணிகத்திற்கான FDI விதிகளில் தளர்வு
July 26 , 2026 12 hrs 0 min 25 0
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய இருப்பு அடிப்படையிலான மாதிரிகளை அனுமதிப்பதன் மூலம், இணையவழி வணிக நிறுவனங்களுக்கான அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிகளை அரசாங்கம் தளர்த்தி உள்ளது.
ஏற்றுமதி நோக்கங்களுக்காக இருப்புகளை வைத்திருக்கும் இணையவழி பொருளாதார நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் பத்திரிக்கைக் குறிப்பை வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் 2026 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று வெளியிட்டது.
முன்னதாக, சரக்கு இருப்பு உரிமை இல்லாத 'வணிகத்திற்கு-வணிகம்' (B2B) சார்ந்த மின்னணு வர்த்தகம் மற்றும் சந்தை-அடிப்படையிலான மாதிரிகளில் மட்டுமே நேரடி அந்நிய முதலீடு (FDI) அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையானது இந்திய விற்பனையாளர்களுக்கு உலகளாவிய சந்தைகளுக்கான அணுகலை அதிகரிப்பதையும், ஏற்றுமதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தளர்வு ஏற்றுமதி தொடர்பான இருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் உள்நாட்டு பல-நிறுவன வணிகம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.