இது 2010-ஆம் ஆண்டு முதல் RBI-யால் வெளியிடப்படும் ஒரு விரிவான அரையாண்டு வெளியீடாகும்.
இது நாட்டின் நிதிச் சந்தை குறித்த ஒட்டு மொத்த கண்ணோட்டத்தை வழங்குகிறது.
அரையாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த அறிக்கை, வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை அளிக்கிறது.
நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழு (FSDC) மூலம், அனைத்து நிதிசார் அதிகார அமைப்புகளிடமிருந்தும் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு இது தொகுக்கப் படுகிறது.
இந்திய வங்கித் துறை குறித்து இது நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டு உள்ளது; குறிப்பாக, வாராக் கடன்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருத்தல், அதிக லாபம், அதிக பணப்புழக்கம் மற்றும் வலுவான கடன் வளர்ச்சி ஆகியவற்றை இது சுட்டிக் காட்டுகிறது.
அதேவேளையில், இணைய அச்சுறுத்தல்கள், புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் பணவீக்கம் தொடர்பான சிக்கல்கள் குறித்தும், பிணையம் இல்லாத கடன்களின் வளர்ச்சி குறித்தும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.