TNPSC Thervupettagam

NMSA-இன் கீழ் நுண்பாசனம்

May 17 , 2026 15 days 91 0
  • 'ஒரு சொட்டு நீர், அதிகப் பயிர்' (Per Drop More Crop) திட்டத்தின் மூலம் 2025-26 முதல் 2029-30 ஆம் ஆண்டு வரை கூடுதலாக 100 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை நுண்பாசனத்தின் கீழ் கொண்டு வர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • பருவநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ், 2014-15 ஆம் ஆண்டில் நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் (NMSA) தொடங்கப்பட்டது.
  • NMSA-வானது விவசாய உற்பத்தித்திறன், நீர் பயன்பாட்டுத் திறன், மண்ணின் ஆரோக்கியம் மற்றும் நிலையான விவசாய முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 'ஒரு சொட்டு நீர், அதிகப் பயிர்' திட்டம் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை ஊக்குவிப்பதுடன் 2015-16 ஆம் ஆண்டு முதல் சுமார் 109 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது.
  • மானாவாரிப் பகுதி மேம்பாடு, மண் ஆரோக்கிய மேலாண்மை மற்றும் பருவநிலை மாற்றம் & நிலையான விவசாயக் கண்காணிப்பு ஆகியவை NMSA-இன் பிற கூறுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்