TNPSC Thervupettagam

தொழிலாளர்கள் சுகாதாரப் பரிசோதனைத் திட்டம்

May 17 , 2026 15 days 94 0
  • தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) மூலம் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதாரப் பரிசோதனைகளை வழங்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இத்திட்டம் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் (OSH) குறியீடு, 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • நச்சு இரசாயனங்கள் அல்லது கனரக இயந்திரங்களைக் கையாளும் தொழிலாளர்களுக்குக் கட்டாயச் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, ஏதேனும் நோய் கண்டறியப்பட்டால் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
  • இத்திட்டம் முக்கியமாக நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களில் கவனம் செலுத்துகிறது.
  • தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (ESIC) மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் இந்தச் சுகாதாரச் சேவைகளை வழங்கும்.
  • இந்தியா முழுவதும் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த இ-ஷ்ராம் (e-Shram) இணையதளம் ESIC உடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்