புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSS) 80வது சுற்றின் கீழ் ‘குடும்ப சமூக நுகர்வு: சுகாதாரம்’ என்ற கணக்கெடுப்பை வெளியிட்டது.
சுமார் 13.1% மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர், இது 2017-18 ஆம் ஆண்டில் இருந்த 7.5% ஐ விட அதிகமாகும்; இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களிடையே மிக அதிகமாக உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் சுமார் 2.9% ஆக இருந்தது, இது முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே அதிகமாக காணப்படுகிறது.
மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் சுமார் 96%-ஐ எட்டியுள்ளது, இது வலுவான தாய்மை சுகாதார பாதுகாப்பைக் காட்டுகிறது.
சுகாதாரக் காப்பீட்டுப் பரவல் சுமார் 44-47% ஆக அதிகரித்துள்ளதோடுஇது முக்கியமாக அரசு திட்டங்கள் மூலமாகவே நிகழ்ந்துள்ளது.
தொற்று நோய்கள் குறைந்துள்ளன, அதே சமயம் 30 வயதிற்குப் பிறகு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளன.