பல்லுயிர்த்தன்மை சட்டம் குறித்த NBA வழிகாட்டுதல்கள்
April 23 , 2026 37 days 150 0
தேசியப் பல்லுயிர்த்தன்மை ஆணையம் (NBA), அணுகல் மற்றும் பயன் பகிர்வு (ABS) நிதிகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக, 2002 ஆம் ஆண்டின் பல்லுயிர் சட்டத்தின் கீழ் திருத்தப் பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உயிரியல் வளங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகளை உள்ளூர் சமூகங்களுடன் நியாயமாகப் பகிர்ந்துகொள்வதை உறுதிசெய்வதை இந்த வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஆதாரம் தெரிந்தால், நிதியில் 60-75% உள்ளூர் சமூகங்களுக்கும், 25-40% நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.
ஆதாரம் தெரியாத போது, 70% நிதி NBA/மாநில பல்லுயிர் வாரியங்களுக்கும் (SBBs), 30% நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.
உயிரியல் வளங்களைக் கண்காணிக்க டிஜிட்டல் களஞ்சியங்கள் மற்றும் சரியான ஆவணப்படுத்தல் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.
இந்த விதிகள் உயிரியல் வளத் திருட்டைத் தடுக்கவும் பல்லுயிர்ப் பாதுகாப்பை ஆதரிக்கவும் உதவுகின்றன.