“பெருங்கடல் பணிகள், மாதிரிகளைச் சேகரித்தல், பயன்பாடு, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்” (O-SMART: Ocean Services, Modelling, Application, Resources and Technology) என்ற திட்டமானது 2021 – 26 ஆகிய காலக் கட்டத்திற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்தியப் பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழு இதற்கு ஒப்பதல் அளித்தது.
O-SMART திட்டம் 7 துணைத் திட்டங்களை உள்ளடக்கியது.
அனைத்துத் துணைத் திட்டங்களும் புவி அறிவியல் அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனங்களால் செயல்படுத்தப் படுகின்றன.