சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சிப் பூங்கா அமைப்பானது தேசியப் பெருங்கடல் சார் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து OCEANS (பெருங்கடல்) 2022 என்ற மாநாட்டினை நடத்தியது.
இந்த மாநாடானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் உலகக் கடல்சார் ஆராய்ச்சியாளர்களுக்கான நிகழ்வாகும்.
இது முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது.
பெருங்கடல் பொறியியல் துறையானது கடல்சார் தொழில்நுட்பச் சமூகம் மற்றும் மின்சாரம் மற்றும் மின்னணுப் பொறியியல் & பெருங்கடல் பொறியியல் சமூகம் ஆகியவற்றின் சார்பாக OCEANS 2022 மாநாட்டினை ஒருங்கிணைந்து நடத்துகிறது.
இந்த மாநாட்டின் கருத்துரு, “ஊக்குவித்தல் – புத்தாக்கம் - நிலைத்தன்மை” (inspire-innovate-sustain) என்பதாகும்.