TNPSC Thervupettagam

OECM அங்கீகார கட்டமைப்பு

November 13 , 2026 17 hrs 0 min 51 0
  • அர்மீனியாவின் யெரெவானில் நடைபெற்ற உயிரியல் பன்முகத்தன்மை மரபின் 17-வது மாநாட்டில் (CBD COP-17), இந்தியாவின் பிற பயனுள்ள பகுதி சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை (I-OECMs) நியமிப்பதற்கான வழிகாட்டுதல்கள் 2026-ஐ மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்.
  • சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே, திறம்பட்ட மற்றும் நீண்டகால இயல்நிலை பல்லுயிர்தன்மை பாதுகாப்பை வழங்கும் பகுதிகளை OECM-கள் அங்கீகரிக்கின்றன.
  • இந்த வழிகாட்டுதல்கள் புவிசார்ந்த, உள்நாட்டு நீர், கடலோர மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கியது, இதில் புனிதக் காடுகள் (sacred groves), பல்லுயிர்தன்மை கொண்ட பூங்காக்கள் மற்றும் சமூகம் நிர்வகிக்கும் குளங்கள் ஆகியவை அடங்கும்.
  • இந்த முன்னெடுப்பு குன்மிங்-மான்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர்தன்மைக் கட்டமைப்பின் (KM-GBF) இலக்கு 3-ஐ (30x30) ஆதரிக்கிறது, இது 2030 ஆம் ஆண்டிற்குள் 30% நிலம் மற்றும் கடல் பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசிய பல்லுயிர்தன்மை ஆணையம் (NBA), மாநில பல்லுயிர்தன்மை வாரியங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச பல்லுயிர்தன்மை சபைகள் ஆகியவை அங்கீகாரத்தை மேற்பார்வையிடும்; அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது கண்காணிக்கப்பட வேண்டும்.
  • உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF-8) திட்டம் ஆறு செயல்விளக்க நிலப்பரப்புகள் மற்றும் கடல்ப்பரப்புகளை உள்ளடக்கும், மேலும் இது இந்தியாவின் நிலம் மற்றும் கடல் பரப்பில் 3%-ஐ அதன் பாதுகாப்பு வலையமைப்பில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்