TNPSC Thervupettagam

சிக்கிமில் புதிய பாலூட்டிகள் பதிவு

November 12 , 2026 2 days 59 0
  • கிழக்கு சிக்கிமின் உயரமான பகுதிகளில் புதிய பாலூட்டிகள் குறித்து ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆய்வில், சிக்கிமின் பாங்கோலாகா வனவிலங்கு சரணாலயத்தில் 3,542 மீட்டர் உயரத்தில் காட்டெருதும் (Gaur), கியோங்னோஸ்லா பகுதியில் 3,966 மீட்டர் உயரத்தில் புலியும் (Tiger) கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • சிக்கிமில் உள்ள மூன்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளான கியோங்னோஸ்லா ஆல்ப்ஸ் சரணாலயம், பாங்கோலாகா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஃபம்போங்லோ வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றில் 64 இடங்களில் இந்த கேமரா-டிராப் கணக்கெடுப்பு (2023-2026) மேற்கொள்ளப்பட்டது.
  • மேலும் 4,100 மீட்டர் உயரத்தில் செந்நிறப் பாண்டா (Red Panda) மற்றும் பொன்னிற குள்ளநரி (Golden Jackal), 3,050 மீட்டர் உயரத்தில் கடமான் (Sambar) மற்றும் 3,189 மீட்டர் உயரத்தில் படைச்சிறுத்தை (Clouded Leopard) ஆகியவை முக்கியமாகக் கண்டறியப்பட்டுள்ளன.
  • IUCN செந்நிறப் பட்டியலில் இவற்றின் நிலையானது காட்டெருது – எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் (VU); புலி – அருகி வரும் இனம் (EN); செந்நிறப் பாண்டா – அருகி வரும் இனம் (EN); பொன்னிற நரி – அச்சுறுத்தல் குறைந்தவை (LC); படைச்சிறுத்தை – எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் (VU).
  • இதற்குத் தகுந்த வாழ்விடங்கள், மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; வனவிலங்குகளின் பரவலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உறுதிப்படுத்த மேலும் நீண்ட கால ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்