TNPSC Thervupettagam

மேற்கு வங்கப் புலிகள் பாதுகாப்புத் திட்டம்

November 11 , 2026 3 days 94 0
  • பீகாரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட டூயர்ஸ் ராணி (Dooars Rani) என்ற மூன்ற வயதுப் பெண் புலி, ரைமோனா தேசிய பூங்காவிற்கு (அசாம்) அருகே பிடிக்கப்பட்டு பக்சா புலிகள் காப்பகத்திற்கு (Buxa Tiger Reserve) திரும்பக் கொண்டுவரப்பட்டது.
  • புலிகள் மற்றும் அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்காக 1973 ஆம் ஆண்டில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' (Project Tiger) தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 1983 ஆம் ஆண்டில் பக்சா புலிகள் காப்பகம் (மேற்கு வங்கம்) நிறுவப்பட்டது.
  • வாழ்விடச் சீரழிவு, வனத் துண்டாக்கம் மற்றும் இரையின் இருப்பு குறைதல் ஆகிய காரணங்களால் பக்சா காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை குறைந்தது.
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவற்றின் ஆதரவுடன் 2018 ஆம் ஆண்டு முதல் 'புலிகள் பெருக்குதல் மற்றும் மீட்புத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று, டூயர்ஸ் ராணி (T-138) வால்மீகி புலிகள் காப்பகத்திலிருந்து (பீகார்) இடமாற்றம் செய்யப்பட்டு பக்சா புலிகள் காப்பகத்தில் விடுவிக்கப்பட்டது.
  • அக்டோபர் 25 அன்று, டூயர்ஸ் ராணி ரைமோனா தேசியப் பூங்காவிற்குள் நுழைந்தது, அங்கு வனத்துறை அதிகாரிகளால் பிடிபட்டு மீண்டும் பக்சா புலிகள் காப்பகத்திற்கு அதனைக் கொண்டு வந்தனர்.
  • இந்த மீட்புத் திட்டமானது, நிலையான புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க வாழ்விட மேம்பாடு, இரையின் அளவை அதிகரித்தல் மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்