மனிதாபிமானம் தொடர்பான சிறந்த கட்டுரை மற்றும் சிறந்த புகைப்படத்திற்காக 2019 ஆம் ஆண்டின் இந்தியப் பத்திரிக்கை நிறுவனம் (Press Institute of India - PII) - சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு (International Committee of the Red Cross - ICRC) ஆகியவற்றின் 13வது பதிப்பு விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
இந்த விருது வழங்கும் விழாவானது PII மற்றும் ICRCன் புது தில்லிப் பிராந்திய தூதுக் குழு ஆகியவற்றால் இணைந்து புது தில்லியில் நடத்தப்பட்டது.
“மனிதாபிமானப் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விருது
பெயர்
கட்டுரை/புகைப்படம்
சிறந்த கட்டுரை
ஊர்வசி சர்க்கார்
‘எங்கள் வீடுகள் மறைந்து வருகின்றன. யாரும் கவலைப் படுவதில்லை’ -
PARI (People’s Archive of Rural India) இணையதளத்தில் வெளியிடப்பட்டது