ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உண்டவல்லி ஹெலிபோர்ட்டில் ஹெலிகாப்டர் செயல் பாடுகளுக்கான இந்தியாவின் முதல் பிரத்தியேக பாயிண்ட்-இன்-ஸ்பேஸ் (PinS) கருவி அணுகுமுறைச் செயல்முறைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த செயல்முறையானது இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) உருவாக்கப் பட்டு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
செயற்கைக்கோள் அடிப்படையிலான கருவி அணுகுமுறைச் செயல்முறையான பாயிண்ட்-இன்-ஸ்பேஸ் (PinS) வழக்கமான கருவி தரையிறக்க அமைப்புகள் இல்லாமலேயே ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் தரையிறங்க உதவுகிறது.
விமானப் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த இது செயல்திறன் அடிப்படையிலான வழிசெலுத்தல் (PBN) மற்றும் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) மற்றும் DGCA விதிமுறைகளால் அமைக்கப்பட்ட தரநிலைகளை இந்த அமைப்பு பின்பற்றுகிறது.