TNPSC Thervupettagam

ஒமேகா பிளாக் வானிலை அமைப்பு

July 3 , 2026 4 days 101 0
  • மேற்கு ஐரோப்பா முழுவதும் ஒரு தீவிரமான வெப்ப அலைக்கு ஒமேகா பிளாக் வானிலை அமைப்பு காரணமாக அமைந்துள்ளதுடன் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் வெப்ப நிலை 40°C ஐத் தாண்டியுள்ளது.
  • ஒமேகா பிளாக் என்பது இரண்டு குறைந்த அழுத்த அமைப்புகளுக்கு இடையில் சிக்கியுள்ள ஒரு உயர் அழுத்த அமைப்பாகும், இது கிரேக்க எழுத்தான ஒமேகாவின் (Ω) வடிவத்தை உருவாக்குகிறது.
  • இது இயல்பான ஜெட் நீரோட்டத்தை சீர்குலைப்பதால் வானிலை அமைப்பானது 3-10 நாட்கள் அல்லது பல வாரங்களுக்கு ஒரே நிலையில் இருக்கும் படி செய்கிறது.
  • இந்த உயர் அழுத்தப் பகுதி வெப்பமான, வறண்ட, மேகமற்ற நிலையைத் தருகிற அதே சமயம் அதைச் சுற்றியுள்ள குறைந்த அழுத்தப் பகுதிகள் குளிர்ந்த மற்றும் ஈரப் பதமான வானிலையைப் பெறுகின்றன.
  • ஒமேகா பிளாக்குகளின் நிகழ்வுகளில் பருவநிலை மாற்றத்தின் விளைவு இன்னும் ஆய்வு நிலையில் உள்ள போதிலும், பருவநிலை மாற்றம் வெப்ப அலைகளின் தீவிரத்தையும் நிகழ்வெண்ணையும் அதிகரிக்கிறது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
  • அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையானது, ஒமேகா பிளாக் நிகழ்வுகளின் போது வெப்ப அலைகளை மிகவும் தீவிரமானதாகவும் நீண்ட காலம் நீடிக்கக் கூடியதாகவும் மாற்றுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்