மகப்பேறு செயல்பாடுகளைப் படிக்கவும் மருந்துகளைச் சோதிக்கவும் மும்பையைச் சேர்ந்த இந்திய அறிவியலாளர்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் placenta-on-chip தளத்தை உருவாக்கியுள்ளனர்.
மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை) – NIRRCH (தேசிய இனப்பெருக்க மற்றும் குழந்தை சுகாதார ஆராய்ச்சி நிறுவனம்) ஆராய்ச்சியாளர்களால் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப் பட்டது.
placenta-on-chip என்பது ஒரு நுண்ணோட்டப் பாய்மவியல் சாதனமாகும் என்பதுடன் இது கட்டுப்படுத்தப் பட்ட ஆய்வகச் சூழலில் மனித நஞ்சுக்கொடியின் செயல் பாடுகளைப் பிரதிபலிக்கிறது.
இந்த தளம் கருவுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மாற்றுவதிலும், கழிவுப் பொருட்களை அகற்றுவதிலும் நஞ்சுக்கொடியின் பங்கை மாதிரியாக்குகிறது.
ப்ரீக்ளாம்ப்சியா/கர்ப்பகால வலிப்புக்கு முந்தைய நிலை மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்ற கர்ப்ப காலச் சிக்கல்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மருந்துப் பரிசோதனைக்கு இதைப் பயன்படுத்தலாம்.