சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) அழைப்பின் பேரில் கஜகஸ்தான், நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு உலகளாவிய ஆணையத்தில் ஒரு நிறுவன உறுப்பினராக இணைந்துள்ளது.
நம்பகமான செயற்கை நுண்ணறிவை (AI) மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்குமான நடைமுறை அணுகுமுறைகளை உருவாக்குவதற்காக ITU இன் கீழ் இந்த ஆணையம் நிறுவப்பட்டது.
இதில் அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இது நம்பகமான AI ஐ உருவாக்குதல், டிஜிட்டல் பிளவைக் குறைத்தல், மேம்பட்ட தொழில் நுட்பங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு AI பங்களிப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ITU ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நன்மைக்கான செயற்கை நுண்ணறிவு உலகளாவிய உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த ஆணையம் தொடங்கப்பட்டது.
இந்த ஆணையம் கொள்கைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், AI ஆளுமை அணுகு முறைகளை உருவாக்குவதற்கும், உலகெங்கிலும் உள்ள AI தொழில் நுட்பங்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்குமான ஒரு தளமாக செயல் படுகிறது.