TNPSC Thervupettagam

இந்தியா-இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்

July 10 , 2026 10 days 86 0
  • இந்தியா மற்றும் இஸ்ரேல் ஒரு புதிய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் (BIA) கையெழுத்திட்டதன் மூலம், இந்தியாவின் புதிய முதலீட்டு ஒப்பந்த மாதிரியை ஏற்றுக் கொண்ட முதல் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் (OECD) சேர்ந்த நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது 1996 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு 2017 ஆம் ஆண்டில் முடித்துக் கொள்ளப்பட்ட முந்தைய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்திற்கு (BIT) மாற்றாக அமைகிறது.
  • இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIA) என்பது முதலீட்டாளர் உரிமைகள் மற்றும் தகராறு தீர்க்கும் வழிமுறைகள் மூலம் முதலீடுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையே செய்யப் படும் ஒரு சட்டபூர்வ ஒப்பந்தமாகும்.
  • இருதரப்பு முதலீடுகளை அதிகரித்தல், நியாயமற்ற முறையில் கையகப் படுத்துவதற்கு எதிரான பாதுகாப்பை வழங்குதல், இழப்பீட்டை உறுதி செய்தல் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் முதலீட்டு ஒப்பந்தக் கட்டமைப்பானது 2015 ஆம் ஆண்டின் மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதுடன் இது முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அதிகாரங்களை சமநிலைப் படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்