இந்திய அரசாங்கமானது, PM E-Drive திட்டத்தினை (புத்தாக்கம் மிக்க வாகன மேம்பாட்டில் பிரதான் மந்திரி மின்சார வாகன இயக்கங்களுக்கான புரட்சி) 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
இந்தத் திட்டமானது, மின்சாரப் பேருந்துகள், ஆம்புலன்ஸ் மற்றும் சரக்குந்துகளை தூய்மையான எரிபொருள் சார்ந்த வாகன இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஊக்கத் தொகையை வழங்குகிறது.
மின்சார இரு சக்கர வாகனங்கள், மின்சார ரிக்ஷாக்கள் மற்றும் மின்சார மூன்று சக்கர வண்டிகளுக்கான சலுகைகள் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடைய உள்ளன.
இந்தத் திட்டமானது, மின்சார சரக்குந்துப் பயன்பாடுகளுக்கு மாறுவதற்காக நாடு முழுவதும் சுமார் 5600 சரக்குந்துகளை இலக்காகக் கொண்டு 9.6 லட்சம் ரூபாய் வரையிலான ஊக்கத்தொகையை வழங்குகிறது.