TNPSC Thervupettagam

PM Ekta பல்கடை அங்காடிகள்

August 7 , 2025 15 days 67 0
  • 2023-24 ஆம் ஆண்டு மூலதன முதலீட்டுத் திட்டத்தின் கீழ் PM Ekta பல்கடை அங்காடிகளை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகளுக்கு (DPRs) இருபத்தேழு மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
  • PM Ekta பல்கடை அங்காடிகள் அனைத்து பிராந்தியங்களிலிருந்தும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்களை ஊக்குவித்து விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது கைவினைஞர்களை ஆதரிப்பதற்கும் உள்ளூர்ப் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்காகவும் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டது.
  • இதற்காக, மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி (SASCI) திட்டத்தின் VIவது பகுதியின் கீழ் நிதி அமைச்சகத்தினால் மொத்தம் 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையானது (DPIIT) செலவினத் துறையின் ஒப்புதலுக்காக இந்தத் திட்டத்தினைப் பரிந்துரை செய்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்