2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 3.5-ஜிகாவாட் (GW) அளவிலான காற்றாலை ஆற்றல் திறனை நிறுவியது என்பதோடு இது 82 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது மற்றும் அதன் மொத்தத் திறனை 51.3 GW ஆக உயர்த்தியது.
இராஜஸ்தானின் ஜெய்சல்மரில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) நடத்திய ஆய்வில், சுமார் 3,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட ஏழு கணக்கெடுப்புகளில் 90 டர்பைன்களுக்கு (விசையாழிகள்) அருகில் 124 இறந்த பறவைகளின் சடலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
கண்டறிதலில் பிழைகள் மற்றும் பிற ஊன்உண்ணிகளின் இடையீடுகளை சரி செய்த பிறகு, மதிப்பிடப் பட்ட வருடாந்திரப் பறவை இறப்பு 1,000 சதுர கிலோமீட்டருக்கு 4,464 பறவைகளாக உள்ளது.
கட்டுப்பாட்டுத் தளங்களில் எந்தப் பறவைகளின் உடலும் காணப்படவில்லை என்ற நிலையில் இது காற்றாலைகளைப் பறவைகளின் குறிப்பாக கழுகுகளின் (ராப்டர்கள்) உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக உறுதிப்படுத்துகிறது.
இறக்கைகளுக்கு வர்ணம் பூசுதல், குறிப்பிட்ட கால இடைவெளி அடிப்படையில் விசையாழிகளின் செயல்பாட்டினை இடை நிறுத்தல் மற்றும் எரிசக்தித் திட்டமிடலுக்கான காற்று உணர்வுக் கருவியைப் (AVISTEP) பயன்படுத்தி தளத் தேர்வு செய்வது மூலம் பறவைகளின் உயிரிழப்பினைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.
பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல் உருவாக்கிய AVISTEP, பாதுகாப்பான திட்டம் சார்ந்த திட்டமிடலுக்காக குறைவான பறவை உயிரிழப்புகள் முதல் மிக அதிகமான பறவை உயிரிழப்புகள் உள்ள பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.
குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் 4 GW ஆலைகளுக்கான பணிகள் தொடங்கப் பட்டு உள்ளதுடன், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 30 GW அளவிலான கடற்கரை சார்ந்த காற்று ஆற்றல் உற்பத்தித் திறனை எட்டத் திட்டமிட்டுள்ளது.