SWANidhi கடன் அட்டை, UPI-இணைக்கப்பட்ட RuPay கடன் அட்டையானது மறு சீரமைக்கப் பட்ட திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்கும் அதே வேளையில், விற்பனையாளர்கள் அன்றாட பணப்புழக்கத் தேவைகளை நிர்வகிக்க உதவும் வட்டி இல்லாத, நெகிழ்வான கடன் வசதியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டை, அவசரகால வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தெருவோர வியாபாரிகளுக்கு உடனடியாக கடன் பெறுவதற்கான அணுகலை வழங்கும்.
இரண்டாவது தவணை கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தியப் பயனாளிகளுக்கு இந்த அட்டை கிடைக்கிறது.
திருத்தப்பட்ட கடன் அமைப்பு, முதல் தவணையில் ரூ.15,000, இரண்டாவது தவணையில் ரூ.25,000 மற்றும் மூன்றாவது தவணையில் ரூ.50,000 வரை கடன் வாங்க அனுமதிக்கிறது.